நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: தெ.ஆ. நட்சத்திரம் கீகன் பீட்டர்சன் விலகல்

 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து நட்சத்திர வீரர் கீகன் பீட்டர்சன் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 17-ல் ஆரம்பிக்கும் டெஸ்ட் தொடர் மார்ச் 1 அன்று நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது  டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி. இந்த டெஸ்ட் தொடரில் 28 வயது கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி 3 டெஸ்டுகளில் 276 ரன்கள் எடுத்து அசத்தினார். 

எனினும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் கீகன் பீட்டர்சன். அறிகுறிகள் எதுவுமின்றி அவர் நலமுடன் உள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து பீட்டர்சன் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 26 வயது ஹம்சா தெ.ஆ. அணியில் தேர்வாகியுள்ளார். அவர் இதுவரை 5 டெஸ்டுகள், ஒரு ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>