நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து கே.எல். ராகுல் விலகல்: தகவல்

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டி20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>