நியூசி. தொடர்: டி20 கேப்டனாகும் ரோஹித் சர்மா, முதல் டெஸ்டில் விராட் கோலி பங்கேற்பாரா?

 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளார். மேலும் ஓய்வு காரணமாக முதல்  டெஸ்டில் விராட் கோலி பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவுள்ளார். துணை கேப்டன் பதவி கே.எல். ராகுலுக்கு வழங்கப்படவுள்ளது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் விராட் கோலி பங்கேற்பதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு 2-வது டெஸ்டில் மட்டும் அவர் விளையாடவுள்ளார். இதனால் முதல் டெஸ்டுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

நியூசிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>