நீங்கள் வாங்கியுள்ள தேன் சுத்தமானதுதானா?

jars_of_honey

நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை மானே தேனே என்று அழைப்போம். காரணம் தேன் அத்தனை மகத்தானது. அவ்வளவு சுத்தமானது. ஆனால் மனிதன் தான் எல்லாவற்றையும் கலப்படம் செய்து விடுகிறானே! கொம்புத் தேன், மலைத்தேன், கடைத்தேன், தேனடை என்று தேன்களை விதவிதமாக வாங்கினாலும் நாம் வாங்கியுள்ளோமா அல்லது வெல்லக் கரைசலா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. பொதுவாக தேன் பார்ப்பதற்கு அடர் செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாவினால் நக்கினால் அதன் இனிப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்த நிறமும் நாக்கில் ஒட்டியிருக்காது. இப்படி விஷயம் அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். தேன் தானே என்று அலட்சியமாக எண்ணாமல் கவனமாக வாங்கிப் பயன்பெறுங்கள்.

ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றியபின், ஒரு சொட்டு தேனை விடுங்கள். தேன் கரையாமல் கலங்காமல் அப்படியே டம்பளரின் அடியில் சென்று படிந்தால் சுத்தமான தேன் என்றறிக.

ஒரு ப்ளாட்டிங் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனை விடுங்கள். அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேன் என்கிறார்கள் செய்து பார்த்தவர்கள்.

சுத்தமான தேனுக்கு எறும்பு வராது என்கிறார்கள். வெல்லத்துக்குதான் எரிம்பு மொய்க்கும். தேனை எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் எறும்பு அண்டாது.

இந்த மூன்று முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும் டிப்ஸ். இவை சரிப்படாது என்று நினைத்தால் நான்காவதாக ஒரு டிப்ஸ் உள்ளது.

ஆற்று மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும். நன்றாக குனிந்து உங்கள் வாயால் அதனை ஊதவும். தேன் மட்டும் உருண்டு ஓடினால் அது தூய்மையான தேன். மணலோடு மணலாக கலந்துவிட்டால் ஊதினால் திரண்டு வராவிட்டால் அது போலியானது. 

சுத்தமான தேனை கண்டு பிடித்து அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் அதனால் ஏற்படும் பலன்கள் கணக்கிலடங்காதது. தேனின் மருத்துவ பலன்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

  • கடுமையான வயிற்றுவலி குணமாக ஒரு தேக்கரண்டி தேனை கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தி வந்தால் கடுமையான வயிற்று வலி உடனே நின்றுவிடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.
  • வயிறு மற்றும் குடற்புண் ஆற தினமும் இரண்டு தேக்கரண்டி தேனை உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு  குடித்து வந்தால் வயிறு மற்றும் குடற்புண்கள் ஆறி விடும்.
  • உடல் சோர்வு, சளி, வயிற்றுப் பிரச்சனைகள் தீர ஒரு தேக்கரண்டி தேனை ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
  • வறட்டு இருமல் குணமாக தேனுடன்  நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி அதனுடன் சிறிதளவு ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.
  • மூட்டுத் தேய்மானம், வலி நீங்க மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேனை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்றாகத தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு தேக்கரண்டி தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.
  • தேனின் மற்ற பயன்கள் தினந்தோறும் இரவு படுக்க போகும்முன் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வுற்ற நிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், ரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவகளுக்குச் மிகச் சிறந்த தீர்வு .

<!–

–>