நீட் தேர்வு விலக்கு: அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்பிக்கள்

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு நாளை தில்லியில் சந்திக்கவுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

இந்நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் இதுதொடர்பாக நாளை தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு சந்திக்க உள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>