நீட் விலக்கு மசோதா: ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

இதையும் படிக்க தமிழகத்தில் அக்.16 பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான ஏ.கே.ராஜன் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமாத கால நிறைவடைய உள்ள நிலையில் இதுதொடர்பாக ஆளுநரை முதல்வர் புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார். 

இதையும் படிக்க ‘2023 சட்டப்பேரவைத் தேர்தல் தான் கடைசி: வாய்ப்பளியுங்கள்’

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல்வருடன் தலைமை செயலர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>