நீண்ட காலத்திற்கான பார்வையோடு சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன்

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஹர்பஜன் சிங் ஓய்வு அறிவிப்பு

இந்நிலையில் நடிகரும், மக்கள்நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பக்கத்தில், “ நீண்ட காலத்திற்கான பார்வையோடு சிந்தித்து சமூகத்துக்கான தன் தத்துவத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவைத்தவர் பெரியார். அதனாலேயே இன்னும் சமூக எதிரிகள் பெரியாரை அஞ்சும் நிலை தொடர்கிறது. அந்த அறிவின் பெரியாரை நினைவுகொள்வோம்” எனப் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>