பஞ்சாப் அரசியலில் மல்யுத்த வீரர் ’கிரேட் காளி’

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியை பஞ்சாபில் சந்தித்து பேசினார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளியுடனான புகைப்படத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து தில்லி அரசின் செயல்பாடுகளுக்கு கிரேட் காளி பாராட்டு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கர்தார்பூர் வழித்தடம்: குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பஞ்சாப் முதல்வர்

மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரசிகர் பட்டாளத்தை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரேட் காளி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஒன்றாக இணைந்து பஞ்சாபை மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 10 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>