''படம் பார்த்தற்கு நன்றி'' – சீமானுக்கு நடிகர் சூர்யா பதில்

ஜெய் பீம் படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பேசாப் பொருளை பேசத் துணிந்து, ஆதிக்குடியான இருளர்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளை உண்மையாகப் பதிவுசெய்து உலமறிய வழங்கி இருக்கிற என் உயிர்த்தம்பி சூர்யாவையும், அவரது இணையர் ஜோதிகாவையும் மீண்டும் மனதாரப் பாராட்டுகிறேன் ! வாழ்த்துகிறேன் ! 

ஜெய் பீம் ஒவ்வொரு மனிதரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல. அதிகாரத்திற்கெதிராகவும், ஆதிக்கங்களுக்கெதிராகவும் உயர்ந்திருக்கிற போர் கருவி என்று குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி. சட்டமும், நீதியும் ஒப்பற்ற ஆயுதங்கள் என்பதை உரக்க கூறவே ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்று நன்றி தெரிவித்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>