படைப்புச் சிந்தனை அதிகரிக்க வேண்டுமா? நடைப்பயிற்சி செய்யுங்கள்!


உடல் இயக்கத்துக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான ஒரு தொடர்பு அறிவியல் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் இயக்கத்தில் இருந்தால் ‘கிரியேட்டிவ் ஐடியா’ எனும் படைப்புச் சிந்தனைத் திறன் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் ‘உளவியல் ஆராய்ச்சி இதழில்’ வெளியிடப்பட்டுள்ளன. 

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு செயலிலும் புதுமை இருக்க வேண்டும் என்று அனைவருமே எதிர்பார்ப்பதுண்டு. அந்த படைப்புச் சிந்தனை மற்றும் படைப்பாற்றல் அனைத்து நேரத்திலும் வெளிப்படுவதில்லை. திடீரென ஒரு சூழ்நிலையில்தான் வெளிப்படும். அதற்காக நாம் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். 

அந்த மாதிரியான படைப்பாற்றல் மற்றும் சிறந்த யோசனைகள் எப்போது தோன்றுகிறது என்பது குறித்த ஓர் ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. 

உடல் இயக்கத்தில் இருக்கும்போது படைப்புச் சிந்தனை அதிகமாக இருக்கிறது என்கிறது இந்த ஆய்வின் முடிவு. 

சாதாரணமாக, உட்கார்ந்திருக்கும்போது ஏற்படும் சிறிய அசைவுகள்கூட படைப்புச் சிந்தனையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இருப்பினும், உடலுக்கு முழுவதுமாக நகரும் சுதந்திரம் இருக்கும்போது படைப்புச் சிந்தனைத் திறன் அதிகம் இருக்கும் என்று ஆய்வாளரும் மருத்துவருமான பார்பரா ஹண்டேல் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில், இயக்கம் அடக்கப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ கூடாது என்றும் உடல் இயல்பாக இருக்கும் நேரத்தில் நிகழும் என்றும் கூறியுள்ளார். 

உதாரணமாக, நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்யும்போது உடல் முழுவதும் இயக்கத்தில் இருக்கும். இந்த சூழ்நிலையில் யோசித்தால் நல்ல சிந்தனைகள் கிடைக்குமாம். 

மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பினாலும் கல்வித்துறை முடங்கியுள்ளதால் குழந்தைகள், இளைஞர்கள் வீட்டில் முடங்கியுள்ளதாலும் அறிவாற்றல் செயல்பாடுகளில் எதிர்மறை விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக உடல் இயக்கங்களுக்கும் அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>