பட்டுப் போன்ற மென்மையான கூந்தல் வேண்டுமா?

மென்மையான தலைமுடி வேண்டும் என்பதுதான் பெண்கள் பலரின் கனவு. நீளமான தலைமுடியோ, சற்றுக் குட்டையான தலைமுடியோ அது மென்மையாக காற்றில் அலையாடும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் கூந்தலை அப்படி பராமரிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே கூந்தலை அழகு படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ஆரோக்கியமான கூந்தல்தான் அழகான கூந்தல் எனவே கூந்தலை பேணி பாதுகாத்து, வாரத்தில் மூன்று தடவை தலைக்கு குளித்து, சிறப்பான பாதுகாப்பு முயற்சிகள் எடுத்தால் தலை மேல் பலன். முயற்சி செய்யலாமா?

1. முட்டை

தலைமுடியைப் பளபளப்பாக மாற்ற முட்டை தலைசிறந்த பொருள். இதில் புரோட்டீன், ஃபேட்டி ஆசிட், லெசிதின் போன்றவை இருப்பதால் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவும். பொலிவிழந்த கூந்தலுக்கும், உடைந்த தலைமுடிக்கும் முட்டையை தொடர்ந்து பயன்படுத்தினால் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும். அடர்த்தியான வலுவான தலைமுடிக்கு முட்டை உதவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனைக் கலக்கி நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை தலைமுடி மற்றும் மண்டை ஓட்டில் தடவி, ஒரு மெல்லிய காட்டன் துணியால் தலையை நன்றாகக் கட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலையைக் கழுவி விடவும். 

இரண்டு முட்டையை எடுத்து நன்றாக அடிக்கவும். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆல்மெண்ட் எண்ணெயை மற்றும் அரை கப் யோகர்ட்டை கலக்கவும். தலையில் நன்றாகத் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரால் ஷாம்பு போட்டு அலசி விடவும். வாரம் ஒரு முறை இதைக் கடைப்பிடிக்கவும்.

2) மயோனிஸ்

மயோனிஸில் அமினோ ஆசிட், புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இதை தலைமுடி பராமரிப்புக்கு பயன்படுத்தினால் உறுதியான, அதே சமயம் மென்மையாக சில்கி ஹேர் கிடைக்கும். 

முதலில் தலைமுடியை அலசிக் கொள்ளவும். உங்கள் தலைமுடி அளவுக்கு ஏற்ப அரை கப் அல்லது ஒரு கப் மயோனிஸை எடுத்துக் கொள்ளவும். தலை முழுவதும் மயோனிஸைத் தடவியபின், அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். அதன் பின் தலைமுடியை மீண்டும் குளிர்ந்த நீரால் மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி அலசவும். வாரம் ஒரு முறையாவது இதைக் கடைப்பிடிக்கவும்.

3) ஹேர் பேக்

கூந்தல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். இது கடைகளில் கிடைக்கும். அதை வீட்டிலும் தயாரிக்கலாம்

தேவையான பொருட்கள் 

முட்டைக்கோஸ்- 300 கிராம் 
முட்டை வெள்ளைக்கரு – 1
கோதுமை மாவு- ஒரு டீஸ்பூன்  

மேற்சொன்னவற்றை நன்றாக அரைத்து உச்சம் தலையில் மற்றும் மண்டை முழுவதும் நன்றாகத் தடவவும். தலைமுடியிலும் முழுவதாகப் பூசவும். ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் தலையை நன்றாக அலசிவிடவும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஹேர் பேக்குடன் இரண்டு புரோட்டீன் மாத்திரைகளை உடைத்து சேர்க்கவும். ஒரு டவலை சுடுநீரில் முக்கி, பிழிந்து தலையில் கட்டி, மண்டை ஓட்டில் லேசாக ஆவிபடும்படி செய்ய வேண்டும். புரோட்டின் மாத்திரை சேர்க்கப்பட்ட ஹேர் பேக்கை எடுத்து தலைமுழுவதும் பூசவும். பின்பு மைல் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்றாக கழுவி விடவும். தொடர்ந்து இதைச் செய்து வர பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். 
 

<!–

–>