பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அல்லு அர்ஜூன்

நடிகர் அல்லு அர்ஜூன் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பெங்களூருவில் பத்திரிகையாளர் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று புதிதாக 627 பேருக்கு கரோனா

வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற இருந்த நிகழ்ச்சியானது படக்குழுவினரின் தாமதம் காரணமாக 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அல்லு அர்ஜூனிடம் பத்திரிகையாளர் ஒருவர் தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அல்லு அர்ஜூன், “முதலில், நான் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் ஒரு தனிவிமானத்தில் வந்தோம். கடும் பனிமூட்டம் காரணமாக, விமானம் சரியான நேரத்தில் புறப்படவில்லை. நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கூட எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார். 

இதையும் படிக்க | குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கிறதா ஜப்பான்?

முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட புஷ்பா திரைப்படமானது இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டைகள் கடத்தும் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். இப்படத்தில் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>