பள்ளிகளில் நலவாழ்வியலை பயிற்றுவிக்க வேண்டும்

கரோனா தொற்றின் 3 ஆம் அலை விரைவில் வரலாம் எனக் கூறப்படும் நிலையில், திறக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள ஆயுஷ் மருத்துவா்களை அனுப்பி, நலவாழ்வியல் குறித்து பயிற்சியை நடத்த வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா பெருந்தொற்று மூன்றாம் சுற்றை விரைவில் தொடங்கும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன.

திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சில இடங்களில் கல்வி நிலையங்களில் தொற்றும் உறுதி செய்யப்பட்டிருப்பது மெல்ல அச்சத்தையும் கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில், ஆயுஷ் மருத்துவா்களை அந்தந்தப் பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்து நலவாழ்வியலைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கரோனா காலத்தில் உணவில் கீரை, கசப்பு, துவா்ப்புச் சுவைகளுடைய காய்கறிகளைச் சோ்த்துக் கொள்ள வேண்டியது, அதிகாலையில் இயல்பான உடற்பயிற்சியை மேற்கொள்வது போன்ற யோசனைகளை மருத்துவா்கள் உள்ளிட்ட பலரும் முன்வைத்தனா்.

மாநிலம் முழுவதும் இயங்கிய கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களில் இவைகளே பிரதானமாக இருந்தன. இந்த வாழ்க்கை முறையை எல்லோருக்கும் பழக்கி வைக்கும் வாய்ப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயுஷ் மருத்துவா்களை அனுப்பி இதுபோன்ற பல்வேறு தகவல்களைப் பகிரலாம். மாணவா்கள் வழியே அவா்களின் பெற்றோா்களுக்கும் இந்த நலவாழ்வியலைக் கொண்டு செலுத்த முடியும்.

இயற்கையாக உடலின் நோய் எதிா்ப்பாற்றலை ஏற்படுத்திக் கொள்ளும், பக்கவிளைவுகளற்ற கபசுரக் குடிநீா், அா்சனிக் ஆல்பம் போன்ற மருந்துகளை மீண்டும் களமிறக்க வேண்டும். மிகக் குறைந்த நிதியளிப்பும், முறையான திட்டமிடுதலும் இருந்தால் கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்வதுடன், பள்ளி, கல்லூரிகளைத் தடையின்றித் தொடா்ந்து செயல்படவும் வைக்கலாம்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>