பாகுபலி இயக்குனருக்காக உருவாகிக் கொண்டிருக்கும் புது ராஜ்ஜியம்!

rajamouli_dream_house

பாகுபலிக்காக மகிழ்மதி, குந்தளம் எனும் கற்பனை தேசங்களை உருவாக்கிக் காட்டிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளெலி இப்போது தனக்கே தனக்கான ஒரு கற்பனை பிரதேசத்தை கனவு கண்டு கொண்டு இருக்கிறாராம். ஆம் அது ஒரு அழகான பண்ணை வீடு.

தனது அழகான கனவை நிஜமாக்க தெலங்கானா மாநிலத்தின் ‘தோனபந்தா’ கிராமத்தில் ராஜமெளலி 100 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறாராம். அங்கே தன் குடும்பத்துக்கான அழகான பண்ணை வீடு ஒன்றை கட்டிக் கொண்டு நகரத்தின் கசடுகள் படியாத தூரத்திலிருக்கும் அந்த கிராம ராஜாங்கத்துக்கு இடம்பெயரவிருக்கிறார்.

ராஜமெளலியின் சகோதரரும், இசையமைப்பாளருமான கீரவாணியும் அதே கிராமத்தில் பண்ணை வீடு கட்ட நிலம் வாங்கி இருக்கிறார் என்றொரு செய்தியும் உண்டு. அப்படியானால் பாகுபலியின் ராஜாக்களைப் போல, ராஜமெளலியின் குடும்பம் அந்த கிராமத்தை ஆட்சி செய்யப் போகிறதா என்று தெலுங்கானா ரசிகர்கள் ஹாஸ்யக் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தனக்காக அருமையான பண்ணை வீடு கட்டி முடிக்கும் வேலையை பிரபல இயக்குனர் ரவீந்தரிடம் ஒப்படைத்திருக்கிறாராம் ராஜமெளலி. பணமிருந்தால் போதுமா? அதைக் கொண்டு ரசனையாகத் திட்டமிட்டு அழகான பண்ணை வீடு கட்ட திறமையான மனமும் இருக்க வேண்டுமே?!

<!–

–>