‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’: சிரோமணி அகாலிதளம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என சிரோமணி அகாலிதளம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. மேலும் பாஜகவுடன் மத்தியில் அமைச்சரவையைப் பகிர்ந்திருந்த சிரோமணி அகாலிதள தலைவர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 772 பேருக்கு கரோனா தொற்று

வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சிரோமணி அகாலிதளம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | ஜெயில் திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக பாஜக கூட்டணியில் இணையப் போவதில்லை அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். இந்த மக்களின் தியாகத்தை நாடு கண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>