பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக களமிறங்கும் பிரபலம் யார் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்தத் தொடரில் தொய்வு ஏற்படும் போதெல்லாம் ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் மற்றும் நடன கலைஞர் பிரபு பாண்டியன் ஸ்டோர்ஸில் கைலாஷ் என்ற வேடத்தில் களமிறங்குகிறார். அவர் வரும் காட்சிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஒளிபரப்பாகவிருக்கின்றன. 

இதையும் படிக்க | இயக்குநராக அறிமுகமாகும் மோகன்லால்: வெளியானது ‘பரோஸ்’ டீசர் விடியோ

இதற்கான ப்ரமோ கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதனால் புதிதாக களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இன்று அந்த கேள்விக்கு விடை கிடைக்கவுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>