பாத்ரூம் டைல்ஸ்களைச் சுத்தம் செய்ய உதவும் ஹோம் மேட் கிளீனிங் பவுடர்!

home_made_cleaning_powder

தேவையான பொருட்கள்:

வாஷிங் சோடா: 400 கிராம்

சமையல் சோடா: 400 கிராம்

தூள் உப்பு: 100 கிராம்

சிட்ரிக் ஆசிட்/ எலுமிச்சம் பழம்: 100 கிராம்/ ஒரு முழு எலுமிச்சம் பழம்

தயாரிப்பு முறை:

ஒரு கப்பில் 400 கிராம் அளவுக்கு வாஷிங் சோடா எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 400 கிராம் அளவுக்கு சோட உப்பு எடுத்துக் கொள்ளவும். இதில் 100 கிராம் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பை எடுத்துக் கொள்ளவும். அயோடைஸ்டு உப்பாக இல்லாமலிருந்தால் நல்லது. இவற்றுடன் 100 கிராம் சிட்ரிக் அமிலம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை துகள்களாகக் கடைகளில் கிடைக்கும். அப்படிக் கிடைக்காவிட்டால் 1 முழு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து மேலே சொல்லப்பட்ட பொருட்களுடன் சேர்த்து ஒரு நாள் முழுமையும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ஒரு கரண்டியால் நன்கு கலந்து ஒரு பெரிய ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டால் பலநாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாத்ரூம் சுவர் மற்றும் தரைகளைச் சுத்தம் செய்ய இந்த கலவை மிக அருமையாக உங்களுக்கு உதவக்கூடும்.

யூ டியூப் தளத்தில் ‘ஆஸ்க் ஜான்ஸி’ என்ற பெயரிலான கிளீனிங் டிப்ஸ் வீடியோக்கள் பிரபலம். அதில் சில சுமாராக இருந்தாலும் இந்த டிப்ஸ் அனைவரும் பயன்பெறக் கூடிய விதத்திலும் குறைவான ரசாயணக் கலப்புடனும் இருந்ததால் பலருக்கும் பயன் தரலாம். 

ஜான்சியின் கிளீனிங் டிப்ஸை நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

நன்றி: ஆஸ்க் ஜான்ஸி!

<!–

–>