பார்வையாளர்களைக் கவர்ந்த கமலா ஹாரிஸ், லேடி காகாவின் உடைகள்!

111

லேடி காகா | கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும், முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் (56) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். 

அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள கேபிடலில் நடைபெற்ற நிகழ்ச்சி கரோனா காரணமாக குறைவான நபர்களுடன் அரங்கேறியது.  

இதில் கமலா ஹாரிஸ், அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடிய பிரபல பாப் இசை பாடகி லேடி காகா ஆகியோரின் உடை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 

இதில் கமலா ஹாரிஸ் வைலட் நிறத்தில் ஒரு உடை அணிந்திருந்தார். இவரது உடையை வடிவமைத்தவர்கள் இரு கறுப்பினத்தவர்கள். கிறிஸ்டோபர் ஜான் ரோஜர்ஸ், சேர்ஜியா ஹட்சன் ஆகியோர் இதனை வடிவமைத்துள்ளனர். இதில், ஜான் ரோஜர்ஸ் நியூயார்க் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் ஆடை வடிவமைப்பாளர். ஹட்சன், தெற்கு கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்தவர். 

அதேபோன்று பாடகி காகா,நேவி புளூ நிறத்தில் மேல் உடையும், சிவப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தார். அவரது உடையில் வெண்புறா ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அமைதியை வலியுறுத்தும் வகையில் இதைத் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல்லே ஒபாமா பழுப்பு நிறத்தில் அணிந்திருந்த உடையும் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டது. 

<!–

–>