பாலா படத்துக்கு பிறகு வெற்றிப் பட இயக்குநருடன் இணையும் சூர்யா 

 

சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் விடுதலை படம் தாமதமாவதால் இயக்குநர் பாலா படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இயக்குநர் பாலா மற்றும் சூர்யா இணையவிருக்கும் படம் வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அடங்க மறு பட இயக்குநர் கார்த்திக் தங்க வேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிக்க | நடிகர் அஜித்தின் ‘வலிமை’ பட விசில் தீம் வெளியானது

முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் கார்த்தி தொடர்ந்து வேறு படங்களில் நடித்து வருவதால் சூர்யாவை இயக்குகிறார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>