''பாவனியை லவ் பண்றியா?'': பிக்பாஸில் ராஜு கேட்ட அதிர்ச்சி கேள்வி: என்ன சொல்லப்போகிறார் அபினய் ?

வைல்டு கார்டு மூலம் அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது, சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடன இயக்குநர் அமீரின் வருகை ஆகியவற்றினால் பிக்பாஸ் தற்போது பரபரப்பாகியுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸின் புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் ட்ரூத் அல்லது டேர் விளையாட்டை விளையாடுகிறார்கள். மேசையை சுற்றி போட்டியாளர்கள் அமர்ந்துகொள்வார்கள். பாட்டில் மேல் வைத்து சுழற்றி விட வேண்டும். அந்த பாட்டில் யார் பக்கம் திரும்புகிறதோ அவருக்கு பாட்டிலை சுழற்றி விட்டவர் கேள்வி கேட்பார். அந்த கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் அல்லது அவர் சொல்லும் பணியை செய்ய வேண்டும். 

இதையும் படிக்க | சிம்புவுக்கு வெற்றி கொடுக்குமா இந்த ‘மாநாடு’ ?: படம் எப்படி இருக்கிறது ? திரைப்பட விமர்சனம்

ராஜு பாட்டிலை சுழற்றிவிடுகிறார். அந்த பாட்டில் அபினய் பக்கம் திரும்புகிறது. இதனையடுத்து ராஜூ அபினயிடம், பாவனியை லவ் பண்றிங்களா எனக் கேட்க, அபினய் அதிர்ச்சியாகிறார். பாவனியும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். அபினய் என்ன சொல்வார் என்பது இன்றைய நிகழச்சியில் தெரிந்துவிடும். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>