
பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் ரெபா மோனிகா ஜான். பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். இதனையடுத்து விஷ்ணு விஷாலுடன் இணைந்து எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார்.
ஏராளமான மலையாள படங்களில் ரெபா நடித்துள்ளார். இந்த நிலையில் ரெபா தனது காதலர் ஜெமோன் ஜோசஃப் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | வெற்றிமாறனைத் தொடர்ந்து சூரியை இயக்கும் அமீர்
எந்த அறிவிப்பும் இல்லாமல், ரெபா திருமணம் செய்து கொண்டது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Reba Monica John gets married to boyfriend Joemon Joseph. pic.twitter.com/Gdrenks2PY
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 10, 2022
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>