பிக்பாஸில் இருந்து மீண்டும் வெளியேறிய அபிஷேக் ?

 

யூடியூபில் சினிமா விமர்சனங்கள் செய்வதன் மூலம் பிரபலமானவர் அபிஷேக். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை பெற்றார். இதனையடுத்து அவருக்கு குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

இதனையடுத்து அவர் மீண்டும் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் போட்டியாளர்களால் அபிஷேக் நாமினேட் செய்யப்பட்டார். அபிஷேக்கிற்கு இந்த முறை குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர் பிக்பாஸை விட்டு வெளியேறிவிட்டாக கூறப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி நாளை (டிசம்பர் 12) தெரிந்துவிடும். 

இதையும் படிக்க | விஜய் 29: ரஜினி சொன்ன விஜய்யின் காலம் – ஏன் ?

கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தற்போது பூரண குணமடைந்த கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் நேரடியாக பிக்பாஸ் படப்பிடிப்பிற்கு சென்றார். தற்போது கமல்ஹாசன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>