பிக்பாஸ் அல்டிமேட்: பாலாவுக்கு போட்டியாக களமிறங்கிய 'பிக்பாஸ் 5' பிரபலம்

 

பிக்பாஸ் அல்டிமேட் இல்லத்தில் நிரூப் நந்தகுமார் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார். இதற்கான அறிவிப்பை புரோமோ விடியோ மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் இல்லத்தில் இவர் பாலாவிற்கு போட்டியாக இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, கவிஞர் சினேகன், அனிதா சம்பத், தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, ஜுலி உள்ளிட்ட பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்ககரோனாவுக்கு பிறகு நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்?: வெளியான புகைப்படம்

இதனுடைய துவக்க விழா இன்று (ஜனவரி 30) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் என்பதால், ஆட்டத்தின் நுணுக்கங்களை உணர்ந்தவர்களாக அனைவரும் இருப்பார்கள். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>