பிக்பாஸ் பிரியங்காவின் கணவர் யார் தெரியுமா ? : வைரலாகும் புகைப்படம்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரியங்காவும் அவரது கணவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

விஜய் டிவியின் முகமாகவே மாறிவிட்டவர் பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்களை தொகுத்து வழங்கி விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே பிக்பாஸையும் கலகலப்பாக்கி வருகிறார். 

இதையும் படிக்க | ‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினியின் பேரன் என்ன சொன்னார் தெரியுமா?: ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதனால் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 

பிரியங்கா, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, கிங்க்ஸ் ஆஃப் ஜுனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸுக்கு பிறகு   அர்ச்சனா போல ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவிற்கு பதிலாக சிவாங்கி தொகுத்து வழங்கவிருக்கிறாராம். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>