பிக்பாஸ் வருணின் அம்மாவும் சின்னத்திரை பிரபலமா ? வெளியான தகவல்

 

கல்வியாளரும் பிரபல சினிமா தயாரிப்பாளுமான ஐசரி கே.கணேஷின் தங்கை மகனான வருண், தலைவா, கோமாளி, சீறு போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பப்பி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ள வருண், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ரசிக்ரகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் வருணின் அம்மாவும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதையும் படிக்க | நடிகர் விக்ரமுக்கு கரோனா பாதிப்பு

பிரபல அழகுக் கலை நிபுணரான வருணின் அம்மா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவையர் பூங்கா என்ற நிகழ்ச்சியில் அதிகம் கலந்துகொண்டுள்ளார். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>