பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு மூலம் நுழையும் போட்டியாளர் யார் தெரியுமா ?

பிக்பாஸின் புதிய ப்ரமோவில் புதிகாக ஒருவர் நுழையவிருப்பதாக காட்டப்படுகிறது. அது பழைய போட்டியாளரா அல்லது புதிய போட்டியாளரா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு மூலம் நுழையவிருக்கும் போட்டியாளர் குறித்து தங்கள் யூகங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அபிஷேக் ராஜா தான் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருகிறார் என்பது ரசிகர்களின் யூகமாக இருந்தது. 

இதையும் படிக்க | சூர்யாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த போட்டியாளர் அமீர் என்று தகவல் கிடைத்துள்ளது. அமீர் மிகப் பிரபலமான நடன இயக்குநர். அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பின் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>