பிக் பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறுகிறாரா அமீர்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப் பெட்டியை எடுத்துக் கொள்ள அமீர் ஒப்புக் கொண்டது போல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில், டிக்கெட் டூ பைனல் போட்டியில் வெற்றி பெற்ற அமீர் நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளார். மீதமுள்ள 6 போட்டியாளர்களில் 4 பேர் மட்டுமே பைனலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த வார எலிமினேசன் போட்டியில் 6 பேரும் உள்ளனர். இதில், இரண்டு பேர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை பிக் பாஸிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட பணத்துடன் வெளியே செல்லும் சலுகையை நடிகர் சரத் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. முதலில் ரூ. 3 லட்சம் எனக் கூறப்பட்ட தொகை படிப்படியாக உயர்ந்து ரூ. 11 லட்சமாக உள்ளது. தொடர்ந்து பேசும் அமீர், எனக்கு பைனலில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. கடைசி வரை சென்று எதுவும் இல்லாமல் செல்வதற்கு பதிலாக இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்கிறார்.

அவரின் முடிவுக்கு சிபி வாழ்த்து தெரிவிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>