பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் புதிய போட்டியாளர்: யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மூன்றாவது வைட்டு கார்டு போட்டியாளர் இன்று நுழைந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் தொடரின் 5வது சீசன் தற்போது 50 நாள்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து போட்டியாளர்களும் தனித்துவத்துடன் விளையாடி வருவதாக கருத்துகள் நிலவி வருகின்றது.

இதற்கிடையே கடந்த வாரம் அபிஷேக் ராஜாவும், இந்த வாரம் நடன இயக்குநர் அமீரும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர்.

இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பள்ளி விளையாட்டில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சிபி, அக்‌ஷரா இடையே ஏற்பட்ட மோதல்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நடிகர் சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மாஸ்டர், புதிய கீதை உள்ளிட்ட திரைப்படங்களிலும் மெட்டி ஒலி, திருமதி செல்வம் போன்ற பிரபல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் என்பது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>