
தஞ்சாவூர்: பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்துக்காக நாடு முழுவதுமுள்ள குத்தகை சாகுபடியாளர்கள் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கின்றனர்.
சிறு, குறு விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்தை (பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனô) மத்திய அரசு 2019, பிப்ரவரி 24 -ஆம் தேதி தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு மூன்று தவûணகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் மொத்தம் ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இத்ùதாகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனûடந்து வருகின்றனர். இத்திட்டத்துக்கு அûனத்துத் தரப்பு விவசாயிகளிடமும் வரúவற்பு இருக்கிறது.
ஆனôல், இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள குத்தகை விவசாயிகள் சேர்க்கப்படவில்லை. இதனôல், தமிழ்நாட்டில் மட்டும் இந்து சமய அறநிûலயத் துûறûயச் சேர்ந்த திருக்úகாயில்கள், திரு மடங்கள், திரு ஆதீனங்கள், பேராலயங்கள், பள்ளிவாசல்கள், அறக்கட்டûளகள், சத்திர நிர்வாகங்கள் உள்ளிட்டவற்ûறச் சார்ந்த நிலங்களில் 5 ஏக்கருக்குள் விவசாயம் செய்து வரும் ஏறத்தாழ 4 லட்சம் குத்தகை விவசாயிகளால் பயன் பெற முடியவில்லை. இதுúபால, நாடு முழுவதும் ஏறத்தாழ 2 கோடி குத்தகை சாகுபடியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சொந்தமாக நிலம் வைத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படும் செலûவவிட, குத்தகை விவசாயிகளுக்குத்தான் செலவு அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக, குத்தகை விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் குத்தûகக்காக ஆண்டுக்குக் கூடுதலாக ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரை செலவிட வேண்டிய கட்டாய நிலை நிலவுகிறது.
குத்தகை விவசாயிகளும் அந்தந்த மாநிலங்களில் முûறப்படி பதிவு செய்தே சாகுபடி மேற்ùகாண்டு வருகின்றனர். அனுமதியளிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்காக விவசாயக் கடன் அட்டை பெற்று, வங்கிகளில் கடனுதவியும் பெற்று வருகின்றனர். இúதúபால, பேரிடர் காலங்களில் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கு நிவாரணம், மானியங்கள் உள்ளிட்டûவயும் பெறுகின்றனர்.
இதுவûரயிலும் பெரும்பாலான திட்டங்களில் பயனûடந்து வந்த நிûலயில், பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்தில் மட்டும் புறக்கணிக்கப்படுவதாக குத்தகை விவசாயிகளிûடயே அதிருப்தி நிலவுகிறது. எனவே, இத்திட்டத்தில் குத்தகை விவசாயிகûளயும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்தில் மட்டும் குத்தகை விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆûணயத்தில் புகார் செய்யப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால், தில்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றôர் விமல்நாதன். சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி செலவு, டீசல், பெட்úரால் விலை உயர்வால் உரம், பூச்சிக்ùகால்லி, நடவு, உழவு, அறுவடை இயந்திரங்களின் வாடகை உயர்வு போன்ற காரணங்களால் சாகுபடி செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
மேலும், கúரானô தொற்று உச்சகட்டத்தை எட்டும்காலத்திலும் கூட இûடவிடாமல் சாகுபடி செய்து, நாட்டுக்குத் தேûவயான உணவு உற்பத்தியை மற்ற விவசாயிகûளப் போல குத்தகை சாகுபடியாளர்களும் மேற்ùகாண்டு வருகின்றனர். எனவே, மத்திய அரசின் வருகிற நிதிநிலை அறிக்கை கூட்டத்ùதாடரில் குத்தகை சாகுபடியாளர்கûளயும் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி ஊக்குவிப்புத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேúலாங்கியுள்ளது.
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>