பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் நாளை (அக்.23) சந்திப்பு

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை நாளை சந்திக்கவிருக்கிறார்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டி தமிழக சட்டப்பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மும்பையில் 61 அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 13ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி 6 நாள் பயணமாக இன்று மாலை தில்லி செல்கிறார். நாளை பிரதமர் மோடியுடன் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்கும் அவர் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அவர் சந்திக்கவுள்ளார். 

இதையும் படிக்க | ‘95 சதவிகித மக்களுக்கு பாஜக தேவையில்லை’: அகிலேஷ் யாதவ்

முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>