பிரபஞ்ச அழகியான இந்திய நடிகை ஹர்னாஸ் சாந்து (புகைப்படங்கள்)

 

பஞ்சாபி நடிகையான ஹர்னாஸ் சாந்து, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2000-ம் ஆண்டு லாரா தத்தா, பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து 21 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் அப்பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார். 1994-ல் சுஷ்மிதா சென்னும் பிரபஞ்ச அழகியாகத் தேர்வானார். 

பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்துள்ள ஹர்னாஸ் சாந்து, முக்கியமான அழகுப் போட்டிகளில் பட்டங்கள் வென்றுள்ளார். இஸ்ரேலில் உள்ள ஈலாட்டில் நடைபெற்ற 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துவுக்குப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாகப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். கடந்த வருடம் பிரபஞ்ச  அழகியாகத் தேர்வான மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெஸா, ஹர்னாஸுக்கு பிரபஞ்ச அழகிக்கான கிரீடம் அணிவித்தார். 2-வது இடத்தை பராகுவே நாட்டைச் சேர்ந்த நாடியா ஃபெரீராவும் 3-வது இடத்தை தென்னாப்பிரிக்காவின் லலேலாவும் பெற்றுள்ளார்கள். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>