பிரபல அமெரிக்க பாப்பாடகி பியான்ஸ் நோல்ஸின் பிரமாண்ட தங்க கவுனை வடிவமைத்தது யார்?

beyonce_noels_pop_singer

பிரபல அமெரிக்கப் பாடகி பியான்ஸ் நோல்ஸின் இந்த தங்க கவுனை வடிவமைத்தது இந்தியர்களாம்.

பிரபல அமெரிக்க பாப் பாடகியான பியான்ஸ் நோல்ஸைப் பற்றி அறிந்திருப்பீர்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவுக்கு விருப்பமான பாடகியான பியான்ஸ் சமீபத்தில் குடும்பத்துடன் விருது விழாவொன்றில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருக்கும் அவரது மாமியாருக்கும் இரண்டு கெளரவ விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளைக் காட்டிலும் அன்று அதிகம் மெச்சிக் கொள்ளப்பட்டது பியான்ஸின் உடையலங்காரம் தான். அவரே பார்வைக்கு, ஒரு மெகா தங்கப் கோப்பை போலத் தான் இருந்தார்.

தங்கச் சிப்பியிலிருந்து முத்து விளைந்து வருவது போன்ற தோற்றம் கொண்ட அந்த உடை பியான்ஸைப் பொறுத்தவரை வெகு ஸ்பெஷலானது. இதை பியான்ஸின் பிரத்யேக ஸ்டைலிஷ்ட்டான மார்ட்னி செனெ ஃபாண்ட்டியுடன் இணைந்து நம்மூர் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தான் மெனக்கெட்டு படு சிரத்தையுடன் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். உடல் முழுதும் மெல்லிய கண்ணாடி போன்ற தங்க இழைகளால் நெய்யப்பட்ட அந்த நீளமான தங்க கவுனின் கால்பகுதி மட்டும் பலமடங்கு நீளத்துடன் கீழே மடக்கி, மடக்கித் தைக்கப் பட்டிருந்தது. தங்க இழைகள் குவிந்து தங்கத்தினாலான முத்துச் சிப்பி போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உடை.

இந்த உடைக்கான இன்ஸ்பிரேஷனை கற்பனை தேசமான வகாண்டாவில் இருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள். அதென்ன வகாண்டா என்று யோசிப்பவர்களுக்கு வகாண்டா ஆப்ரிக்காவில் சித்தரிக்கப்படும் ஒரு கற்பனை தேசம், அந்த தேசத்திலிருந்து தான் கற்பனை சாகஷக் கதாபாத்திரமான பிளாக் பாந்தர் தோன்றுவார். அந்த தேசத்தின் வில்லாளி நுபியன் ராணுவத்தால் வெல்லப்படுவதாகக் கதை உண்டு. அந்தச் சித்தரிப்பை மனதில் வைத்தே இந்த உடையை உருவாக்கி இருக்கிறார்களாம். 

விழாவில் பியான்ஸுடன் கலந்து கொண்ட அவரது இளைய மகள் ஐவியும் தன் தாயின் மினியேச்சர் போல அந்தச் சிறுமியின் அளவுக்கு தைக்கப்பட்ட ஒரு பிரமாண்ட தங்க கவுனில் தான் வலம் வந்தார். இந்த ஆடைகளை வடிவமைத்திருப்பது இரு இந்தியர்கள் அவர்களது பெயர்கள் முறையே ஃபல்குனி மற்றும் ஷேன் பீகாக்.

இப்படி இரு தங்க மங்கைகளுக்கு நடுவில் பியான்ஸின் கணவரும் பிரபல பாப் பாடகருமான ஜே.சி கார்ட்டர் என்ன தான் அம்சமான கோட் ஷூட்டில் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தாலும் கூட பார்வையாளர்களின் கண்கள் மொத்தமும் மொய்த்துக் கொண்டிருந்தது இந்த அம்மா, மகள் டியோ தேவதைகள் மேல் தான்.
 

Image courtesy: swirlster.ndtv.com

<!–

–>