பிரபல கதாநாயகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார்.  இந்தப் படத்தில் கடிஜா என்ற வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் சமந்தாவின் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடருக்கு பிறகு சமந்தா இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார். அவர் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

இதையும் படிக்க | ”விஸ்வாசம் எப்படி வெற்றிபெற்றதுனு தோணுச்சு” : இயக்குநர் சிவா குறித்து நடிகர் ரஜினிகாந்த் அதிரடி : வெளியான ஆடியோ

இந்த நிலையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகுமாரின் இயக்கத்தில் ஏற்கனவே சமந்தா, ‘ரங்கஸ்தலம்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

‘புஷ்பா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>