பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கரோனா பாதிப்பு

 

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி என்கிடி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

25 வயது என்கிடி – 10 டெஸ்டுகள், 29 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் 26 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இத்தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள லுங்கி என்கிடி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஜுனியர் டாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஜூலையில் அயர்லாந்து தொடரில் விளையாடிய பிறகு தெ.ஆ. அணியில் என்கிடி இடம்பெறவில்லை. இலங்கைச் சுற்றுப்பயணத்தைச் சொந்தக் காரணங்களுக்காகத் தவறவிட்டார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்றாலும் ஓர் ஆட்டத்திலும் என்கிடி விளையாடவில்லை.  

இத்தொடரில் தெ.ஆ. அணியின் முதல் தேர்வு 6 வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஷவ் மஹாராஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

என்கிடி

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>