பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தமன்னா முடிவு

 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மீது தமன்னா சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் போலவே சர்வதே அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை தமன்னா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். 

தெலுங்கில் தமன்னா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் தமன்னா இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அனுசயா என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். 

இதையும் படிக்க | உண்மையாகவே பாரதி கண்ணம்மா விலகப் போகிறாரா?

தமன்னா ஏன் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகினார் என்பதற்கான தகவல் வெளியாகமலேயே இருந்தது. இந்த நிலையில் தமன்னா சார்பில் அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமன்னாவுக்கு ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை. தொழில் ரீதியாகவும் அவரிடம் முறையாக நடந்துகொள்ளவில்லை.  இருந்தாலும் தமன்னா அந்த நிகழ்ச்சிக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்கி வந்தார். 

ஆனால் அவருடனான தொடர்பை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>