பிரபல நடிகை கரீனா கபூருக்கு கரோனா பாதிப்பு

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர், கரீனா கபூர். 2012-ல் நடிகை கரீனா கபூரும் நடிகர் சயிப் அலி கானும் திருமணம் செய்துகொண்டார்கள். 2016-ல் மகன் பிறந்தான். தைமூர் அலி கான் எனப் பெயர் சூட்டினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கரீனா கபூருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. நடிகர் ஆமிர் கானின் அடுத்த படமான லால் சிங் சத்தா-வில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கரீனா கபூர்.  திரையுலகில் 21-வது வருடத்தைச் சமீபத்தில் பூர்த்தி செய்தார்.  

இந்நிலையில் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகிய இரு பாலிவுட் நடிகைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டார்கள். இதையடுத்து இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் இருவர் தரப்பிலும் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. கரீனா, அம்ரிதா ஆகிய இருவருடனும் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>