புதிய அப்டேட் கொடுத்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் நான் பிழை எனும் பாடல் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தக் கூட்டணியுடன் சமந்தாவும் இணைந்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க | ஆர்ஆர்ஆர் திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள நான் பிழை எனும் பாடம் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையும் படிக்க | கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>