புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் ’ஃபிட்பிட்’ நிறுவனம்

ஃபிட்பிட் நிறுவனம் தன்னுடைய செயலியில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஃபிட்பிட் செயலியைக் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்தும் பிரிமியர் உறுப்பினர்களுக்கு சில புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதன் படி ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைப் தொடர்ந்து பரிசோதிக்கும் கருவியையும் , இதயத் துடிப்பு மற்றும் சமீபத்திய தூக்க நேரங்களைக் கணக்கிடும் சிறப்பம்சங்கள் செயலியின் மூலம் ஃபிட்பிட் ஸ்மார்ட்வாட்ச்களில் வர இருக்கிறது.

அதன் தயாரிப்புகளான சென்ஸ்,  வெர்சா 2 , வெர்சா 3, சார்ஜ் 5 சாதனங்களைப் பயன்படுத்தும் பிரிமியம் உறுப்பினர்களின் முகப்புப் பக்கத்தில் தினசரி அளவீடுகளைப் பற்றித் தெரிவிக்கப்படும் என்றும் சென்ஸ் மற்றும் வெர்சா 3 ஸ்மார்ட்வாட்ச்களின் பயனர்களும் தங்களுடைய மதிப்பெண்ணை மணிக்கட்டில் பார்க்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அதன் அறிக்கையில் வெர்சா 5 சாதனமே ஃபிட்பிட் நிறுவனத்தின் முதல் இசிஜி அளவைப் பரிசோதிக்கும் சாதனம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதய அளவீடுகளை அறிய 30 வினாடிகள் அசையாமல், சாதனத்தின் பக்கவாட்டில் உள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேனல்களில் உங்கள் விரல்களைப் பிடித்துக் கொண்டு  உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைப் பெறவும் , நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஃபிட்பிட் பயனர்கள், ஃபிட்பிட் பயன்பாட்டில் புதிய இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு கருவியைப் பயன்படுத்தி நாள் முழுவதும் குளுக்கோஸ் அளவு எவ்வாறு மாறுகிறது என்பதைக் கணக்கிட்டு  உடல் செயல்பாடு, தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து போன்ற பிற சுகாதார அளவீடுகளுக்கு எதிர்வினையாற்றவும் முடியும்.

மேலும் உடல் நலத்தைப் பேணும் வகையில் டாஷ்போர்டில் தினசரி அளவீடுகளைப் பற்றிய தகவல்களை அறிந்து மன அழுத்த மேலாண்மை மற்றும் தூக்கம் ஆகியவையின் நிலையை அறியவும் இந்த சிறப்பம்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக பயனர்கள் சிறந்த முறையில் உடற்பயிற்சி செய்யவும், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், நன்றாக தூங்கவும், நன்றாக சாப்பிடவும் இந்த புதிய அம்சங்கள் உதவுகின்றன.

ஃபிட்பிட் நிறுவனம் “பூட்கேம்ப் முதல் மொபிலிட்டி வேலை வரையிலான புதிய ஃபிட்பிட் ஆடியோ மற்றும் வீடியோ உடற்பயிற்சிகளையும் நாங்கள் சேர்ப்போம், மேலும் சேவையில் வழங்கப்படும் 500+ உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக பிரபலமான பிராண்டுகளின் தற்போதைய உள்ளடக்கத்தை தொடர்ந்து புதுப்பிப்போம்” எனத்  தெரிவித்துள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>