புதிய கேப்டன் ரோஹித் சர்மா; துணை கேப்டன் ராகுல்: நியூசி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. நவம்பர் 17-ம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடர் நவம்பர் 21-ம் தேதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>