புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்துப் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அம்மாநில பொறுப்பாளர் சோம்நாத் பாரதி எம்எல்ஏ தெவித்தார்.

இது குறித்து, அவர் வியாழக்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது:
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது.  உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம், புதுச்சேரியில் உள்ள உள்ளாட்சி கூட்டமைப்பு உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து போட்டியிட உள்ளோம்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் பொதுமக்களையும் வரவேற்கிறோம்.
இங்குள்ள மத்திய பாஜக அரசு, எம்எல்ஏ, எம்பி பதவிகளை ஜனநாயக விரோதமாக பறித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தின் கடன், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. அவர்களால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது.

ஆம் ஆத்மி மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நல்ல நிர்வாகத்தை வழங்குவோம் என்றார். 

மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>