புனித் ராஜ்குமார் மறைவு: சிவ ராஜ்குமாரை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல்

 

கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) திடீரென மாரடைப்பால் காலமானார்.  இளம் வயதில் அவர் மரணமடைந்தது ஒட்டுமொத்த  இந்திய திரையுலகினரையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

அவரது இறுதிச் சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புனித் ராஜ்குமாரின் உடல் அவர் தாய் மற்றும் தந்தையின் நினைவிடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>