'புஷ்பா' ஊ சொல்றியா பாடல்: விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா பதில்

சுகுமார் இயக்கிய ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் மிக அசத்தலான நடிப்பை சமந்தா வழங்கியிருப்பார். இதனையடுத்து சுகுமார் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலில் மிக கவர்ச்சிகரமாக நடனமாடியிருந்தார்.

இந்தப் பாடலுக்கு வரவேற்பு கிடைத்த வரும் வேளையில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சமந்தா அல்லு அர்ஜுனுடன் நடனமாடும் படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் படிக்க | சர்ச்சைக்குள்ளான ‘புஷ்பா’ பட காதல் காட்சி: ரசிகர்களின் எதிர்ப்பால் நீக்கம்

அதில், நான் நல்ல குணம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறேன். மோசமான குணம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறேன். நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான வேடத்திலும் நடித்திருக்கிறேன்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். நான் ஒப்புக்கொள்ளும் எல்லாவற்றிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க கடுமையாக உழைத்திருக்கிறேன். ஆனால் கவர்ச்சிகரமாக இருக்க உச்சகட்ட உழைப்பை வழங்க வேண்டும். அன்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>