'புஷ்பா' பட ஓ சொல்றியா மாமா விடியோ பாடல் வெளியானது

அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தப் படத்தின் கிடைத்த வரவேற்புக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஒரு முக்கிய காரணம். குறிப்பாக இந்தப் படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. 

இதையும் படிக்க | இசையமைப்பாளர் தமனுக்கு கரோனா

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓ சொல்றியா மாமா பாடல் விடியோ தற்போது வெளியானது. புஷ்பா திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  


 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>