பெண்கள் சேலையில் ‘ஸ்லிம்’ தோற்றம் பெறச் சில டிப்ஸ்!

celebrities-in-boat-neck-designs

புடவை பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். சிலருக்கு உடுத்திக் கொள்ள ஆசையிருந்தாலும் ‘ஸ்லிம்’ ஆக இருப்பவர்களுக்குத் தான் புடவை தோது… நம்மைப் போல பூசின உடல்வாகு கொண்டவர்களுக்கு புடவை நன்றாக இருக்காது. பூசனிக்காய் மாதிரி இருக்கிறாய் என்று யாரேனும் கேலி செய்து விடுவார்களோ! என்ற மனத்தாங்கலில் புடவை உடுத்தப் பிடித்தே இருந்தாலும் அடிக்கடி உடுத்திக் கொள்ள விருப்பமிருக்காது. அந்தக் கவலை இனி வேண்டாம். ஸ்லிம் சுந்தரிகள் மட்டுமல்ல கொஞ்சம் பூசினாற் போல உடல்வாகு கொண்டவர்களையும் ஸ்லிம் தோற்றம் பெறச் செய்யும் வகையிலான புடவை கட்டும் ஸ்டைல்களை இப்போது  அறிந்து கொள்ளுங்கள்.

சிறிய பார்டர்கள் உள்ள புடவைகளைப் போலவே புடவையின் மேற்பகுதியில் ஒரு நிறம், கீழ்பகுதியில் ஒரு நிறம் என கிடைமட்டமாக இருநிறத்தில் வடிவமைக்கப்படும் புடவைகளை உடுத்திக் கொண்டால் சற்றுப் பூசினாற்போல உடல் எடை கொண்டவர்களும் ஸ்லிம் ஆகத் தோன்றுவார்கள்.

பளீர் கருப்பு நிறம் புடவையின் மேற்பகுதியிலும் சற்றே அரை வெண்மை அல்லது கிரீம் நிறம் புடவையின் கீழ்ப்பகுதியிலும் வடிவமைக்கப்பட்ட புடவைகளை அணிந்தால் அப்போதும் காண்போர் கவனமெல்லாம் பளீர் கருப்பில் ஆழ்ந்து கீழுள்ள அரை வெண்மை நிறம் மேலும் மங்கலாகக் கவனம் பெற்று காண்போருக்கு ஸ்லிம் தோற்றம் ஏற்படுத்தக் கூடும்.

முற்று முழுதாக கருநிறப் புடவைக்குப் பொருத்தமாக முழுக்கருப்பு நிறச் சோளி அணிந்து விழாக்களுக்குச் சென்றீர்களெனில் உங்களது தோற்றம் கருமையின் மகிமையால் பிறர் கண்களுக்கு ஸ்லிம் ஆகவே தெரியக்கூடும் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.

புடவையின் முந்தானைப் பகுதியை இவரைப் போல மடிப்புகள் வைத்துப் பின் குத்தாமல் அப்படியே சுதந்திரமாக ஒற்றைப் பள்ளுவாக விரித்து விட்டுக் கொண்டாலும் சற்றே குண்டாக இருப்பவர்களும் கூட ஸ்லிம் ஆகவே தோற்றமளிப்பார்கள். ஏனெனில், ஒற்றைப் பள்ளு ஸ்டைலில் புடவை உடுத்துகையில் இடுப்புப் பகுதி வெளியே எக்ஸ்போஸ் ஆகாமல் மறைந்து விடுவதால் ஸ்லிம் தோற்றம் பெறலாம்.

படத்தில் சோனாக்‌ஷி அணிந்திருப்பது போல கடற்கன்னி ஸ்டைலில் புடவை உடுத்திக் கொண்டாலும் கூட சற்றே சதைப்பற்றுடனும் இருக்கும் இடுப்பு மற்றும் தோள்ப்பட்டை பகுதிகளில் கவனம் குவிவதைக் காட்டிலும் கீழே பாதங்களின் அருகே விசிறி போல அசைந்து புரளும் மடிப்புகளில் காண்போர் கவனம் சிதறும். அதன் காரணமாக ஸ்லிம் லுக் பெறலாம்.

படத்தில் சோனம் கபூர் அணிந்திருப்பது போல ஃப்ரண்ட் லூப் பள்ளு ஸ்டைலில் புடவை உடுத்திக் கொண்டாலும் உங்களது தோற்றம் ஸ்லிம் லுக் தரலாம். அது மட்டுமல்ல, இடுப்பு, புஜம், முதுகு என எங்கேனும் சதை பிதுங்கிக் கொண்டு தெரிவதாக உணர்ந்தாலும் அதை இப்படி புடவை உடுத்துவதன் மூலமாக நீங்கள் சற்று மறைக்கலாம். இந்த ஸ்டைலில் புடவை உடுத்தும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், உங்களது புடவை இப்படி உடுத்திக் கொள்ளும் அளவுக்கு நீளமானதா என்று யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் புடவையின் உள்மடிப்புக்கு இதே நிறத் துணி வாங்கி புடவையின் உட்பகுதியுடன் இணைத்துத் தைத்து உங்களுக்கேற்ற பெரிய புடவையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

மேற்கண்ட ஆறு விதமான ஸ்டைல்களிலும் புடவை உடுத்திக் கொண்டால் உடுத்துபவர் ஸ்லிம் தோற்றம் பெறலாம் என்பதோடு, தினமும் ஒரே விதமாகப் உடவை உடுத்தும் அலுப்பிலிருந்தும் மீளலாம்.

<!–

–>