பெண்கள் பூப்பெய்துவதில் உள்ள பிரச்னைகள்! ஹோமியோபதி தீர்வுகள்!

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு   மாமலையும் ஓர் கடுகாம்!’ என்பார் புதுமைக் கவி பாரதிதாசன். பருவ மலர்ச்சியின் ஆற்றல் அப்படிப்பட்டது. ஆனால் பருவம் கண் திறக்காவிட்டால், பூப்பு என்கிற பருவகால பரிணாமம் நிகழாவிட்டால் வாழ்க்கையே சுமையாகி விடுகிறது.

பருவகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணும் இயக்கு நீர்களின் (HORMONES) மாற்றங்களுக்கு ஆளாகும் காலம். நாளமில்லாச் சுரப்பி நோய்களின் நிபுணர்கள் இப்பருவத்தை ஹார்மோன்களின் சமன்பாட்டுக்குரிய காலக்கட்டம் என்கின்றனர். பெண்ணிடம் பூப்படையும் பருவத்தையொட்டி சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் தோற்றத்தில் விரைவான மாற்றம், உயரமும் எடையும் அதிகரிப்பு, இடுப்பு விரிவடைதல், மாதவிடாய் வர ஆரம்பித்தல், மார்பக வளர்ச்சி, பிறப்புறுப்பின் மேட்டுப்பகுதியிலும், சுற்றிலும், அக்குளிலும் முடி முளைத்தல், சிந்தனையில், நடத்தையில் மாறுதல், உணர்வுகளில் மாறுதல் ஆண் மீதான ஆர்வம் போன்ற புற, அக மாற்றங்கள் நிகழ்கின்றன.

சிறுமியாக இருந்த பெண்ணைப் பருவ மங்கையாய் பரிமளிக்கச் செய்வது இயக்குநீர்கள் தான். பூப்படைவதற்கு 4 ஆண்டுக்கு முன்பு மூளையின் முக்கியப் பகுதியான ஹைப்போதாலமஸின் (HYPOTHALAMUS) சுரக்கும் இயக்குநீர்கள். ரத்த நாளங்கள் மூலம் பிட்யூட்டரிக்குச் செல்கின்றன. பிட்யூட்டரியில் பல ரசாயன ஹார்மோன்கள் சுரக்கும்படி தூண்டுவதால் முதல் இரண்டு வருடம் பெண்ணிடம் நன்கு வளர்ச்சி ஏற்படும்.

பிட்யூட்டரி என்னும் சுரப்பி மூளை அடிப்புறத்தில் சிறு பட்டாணி அளவில் அமைந்துள்ளது. இதில் சுரக்கும் கொனடோட்ராபின் இயக்குநீர் (GONADOTROPIN HORMONE) பெண்ணின் சினைப்பையையும் (OVARY) ஆண்களின் விரையையும் (TESTIS) கட்டுப்படுத்தும். பாலிக்கிள் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FSH) கருவணுக்கள் உற்பத்தியைத் தூண்டி ஈஸ்ட்ரோஜனை வெளிப்படுத்தும். பிட்யூட்டரி சுரக்கும் மற்றொரு ஹார்மோன் பெண்ணின் கார்பஸ் லூட்டியத்தின் புரொஜெஸ்டிரான் உற்பத்தியைத் தூண்டுகிறது; ஆண்களின் விரைவில் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இத்தகைய செக்ஸ் ஹார்மோன்கள் கருமுட்டையை உருவாக்கி, முதிரச் செய்கிறது; கர்ப்பப்பையின் உட்புற அமைப்பை கரு வளர்ச்சிக்கு ஏற்றபடி மாற்றுகிறது; மாதவிடாய் ஏற்படச் செய்கிறது. ஹைப்போதாலமஸில் சுரக்கும் ‘கொனடோட்ராபின் ’ரீலிசிங் ஹார்மோன்’ (GONADOTROPIN RELEASING HORMONE) ரத்த நாளங்கள் வழியாகப் பிட்யூட்டரி அடைத்து பாலிகிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனை சுரக்க செய்கிறது. இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது கருவணுக்கள் வளரத் துவங்கும் இக்கரு அணுக்கள் வளரும் போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் கருப்பையிலுள்ள தசையணுக்கள் அதிகரிக்க உதவுகிறது. கருப்பையின் உள்புறம் பஞ்சுமெத்தை போல் மாறுகிறது. கரு தங்கி வளர வசதி அமைகிறது.

ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பிட்யூட்டரி சுரப்பி (FSH) சுரப்பு அளவை குறைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகக் கரு அணுக்களும் குறையும். கருப்பையில் வளரும் இணைப்புத் திசுக்களுக்கு (கருவுறுதல் நடக்காத போது) ரத்தம் கொண்டு செல்லும் நாளங்கள் உறைந்து ரத்தப் பெருக்கு ஏற்படுகிறது. இணைப்புத் திசுக்களும் தசையணுக்களும் (எண்டோ மெட்ரியம் எனும் கருப்பையின் உட்புற ஜவ்வு) நொறுக்கி உதிரத் தொடங்கி பிறப்புறுப்பு வழியே வெளி வருகிறது. முதன் முதலாக இது நிகழும் போது ‘பூப்பெய்துதல்’ என்றும் தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறும் போது  ‘மாதவிடாய்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போக்கு அழுக்கு இரத்தம், கெட்ட ரத்தம், கிருமிகள் உள்ள ரத்தம் என்ற கருத்துக்கள் உண்மையல்ல.

ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது பிட்யூட்டரி சுரப்பைக் குறைக்கும்; LH (LUTEINISING HORMONE) இயக்குநீரை சுரக்கும்.இந்த LH கருமுட்டையை வெடிக்கச் செய்து சினைப்பையிலிருந்து வெளியேற்றும். சினைப்பையின் அருகிலுள்ள புனல் போன்ற அமைப்பை கருமுட்டை நெருங்கும். ’CILIA’ எனப்படும் சிறுவிரல்கள் போன்ற பாகம் கருமுட்டையை உள்வாங்கி கருக்குழாய் வழியே கர்ப்பப்பையை நோக்கி நகர்த்தும். கருமுட்டை ஆண் விந்தணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகும். சினைப்பையில் (OVARY) கருமுட்டை வெளியேறிய இடத்தில் ஏற்படக்கூடிய ரத்தப்பாகு கெட்டியாகி (CARPUS LUTEUM) புரொஜெஸ்டின் (PROJESTRON) என்ற இயக்குநீரை சுரக்கிறது. கருமுட்டை வெடித்துக் கிளம்பி வரும் சமயத்தில் ‘ENDOMETRIUM’ எனப்படும். கர்ப்பையின் உட்சுவர் நன்கு வளர ’ஈஸ்ட்ரோஜன்’ இயக்குநீர் உதவுகிறது. இந்த உட்சுவர் மீது ரத்தக்குழாய்களை உருவாக்குவதற்கும் மென்மையான ஜவ்வு போன்ற படலம் வளர்வதற்கும் சளி போன்ற திரவம் சுரப்பதற்கும் ‘புரொஜெஸ்டின்’ இயக்குநீர் உதவுகிறது. கருமுட்டை திரவம் விந்தணுக்கள் எளிதில் நீந்திச் செல்ல உதவுகிறது. கருமுட்டை வெளியேறும் சமயத்தில் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏற்படும் மாற்றங்களால் பெண்ணின் உடலில் வெப்பம் காணப்படும்.

பூப்படையாமைக்கு முக்கியக் காரணங்கள்:

1. கர்ப்பப்பை மற்றும் சினைமுட்டைப்பை(UTERUS & OVARY) பிறவியிலேயே இல்லாமலிருத்தல் அல்லது சரியாக வளர்ச்சி பெறாமல் (INFANTILE UTERUS) இருத்தல்.

2. மரபுவழிக் காரணங்கள்

3. சுரப்பிகளின் இயக்க கோளாறு

4. சர்க்கரை வியாதிகள் அம்மைக் கட்டு போன்ற தொற்றுநோய் சினை முட்டைப் பையைத் தாக்கிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்; சினைப் பையினுள் கட்டிகள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்.

மேற்குறிப்பிட்ட உடற்கூறு, உடலியக்க விஞ்ஞான உண்மைகள் அனைத்தையும் எல்லா மருந்துவ முறைகளும் ஒத்துக் கொள்கிறது. தேவைப்படும் பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை கண்டறிந்து கொள்கின்றன. ஆயினும் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஹார்மோன் பிரச்னைகளை தீர்க்க ஹார்மோன் மாத்திரைகளை மட்டும் கொடுத்துச் சிகிச்சை அளிப்பதில்லை. பெண்ணின் உடல்நிலை, மனநிலை போன்றவைகளைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுத்து இயற்கையான வழி முறையில் நிரந்தர குணம் கிடைக்கும்படிச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

பூப்படையும் காலப் பிரச்சனைகளுக்கு உதவும் ஹோமியோ மருந்துகள்:   

1. பிட்யூட்டரினம் 30/200 (Pitutarinum) – பருவமடைவதில் தாமதம் மார்பகங்கள் வளர்ச்சியின்மை. பிறப்புறுப்புப் பகுதிகளிலும், அக்குளிலும் முடிகள் முளைக்காமலிருத்தல்.

2. காலிகார்ப் (Kalicarb)     – முதல் மாதவிடாய் தாமப்படுதல் அல்லது முதல் முறைவிடாய் ஏற்பட்ட பின் மீண்டும் மாதக்கணக்கில் வெளி வராமை.

3. பல்சடில்லா (Pulsatilla) – பூப்படைந்த காலத்தில் பல்வேறு மாதவிடாய் கோளாறுகளைக் குணப்படுத்தும். முதல் மாதம் விடாய் தாமதம்.

4. ஆஸ்டீரியஸ் (Asterias Rub) – பூப்பு காலத்தில் முகப்பருக்கள் வெடித்தல்.

5. ஆரம்மெட் (Aurum Met) – பூப்படைந்த பெண்களிடம் படபடப்பு, வாய் துர்நாற்றம்.

6. அலுமினா (Alumina) – பசலை நோய், முகவெளுப்பு, சோம்பல், பசிமந்தம், ஜீரணக்குறைவு, மாதவிடாய் ஏற்படாத பெண்களிடம் ரத்த சோகை.

7. மான்சினெல்லா (Mancinella) – பூப்பு காலத்தில் மனச்சோர்வு, காதல் தோல்வியால் மனவேதனை.

8. லைகோபோடியாம் (Lycopodium) – பருவமடைந்தும், வயதுகூடியும் மார்பகங்கள் வளர்ச்சியற்ற நிலை.

9. ஓனோஸ்மோடியம் (Onosmodium) – மார்பகங்கள் வளராமை அல்லது மிகச்சிறு அளவில் அமைந்திருத்தல்.

10. மெர்க்சால் (Merc sol) – மாதவிடாய்க்குப் பதிலாக மார்பகங்களில் பால்சுரப்பு.

11. கல்கேரியாகார்ப் (Calcarea carb) – மாதவிடாய் தோன்றும் முன் வெள்ளைப்பாடு தோன்றுதல்.

12. யூபரேஷியா (Eupharasia) – மாதவிடாய் ஒரு மணி நேரமே வருதல்.

13. லாச்சஸிஸ் (Lachesis) – மாதவிடாய்க்கு முன்பு வலி; போக்கு வெளியானதும் வலி குறைதல்.

14. கிராபைட்டிஸ் (Graphites) – மாதவிடாய்க்கு முன் பிறப்புறுப்பில் கடுமையான அரிப்பு.

15. மெக்னீஷியம் கார்ப் (Magnesium Carb) – மாதவிடாய்க்கு முன் தொண்டையில் புண் ஏற்படுதல்.

16. சபீனா (Sabina), ஃபெர்ரம் மெட் (Ferrum Met) மாதவிடாய் பாதி கட்டியாகவும் பாதி தண்ணீராகவும் இருத்தல்.

17. பொவிஸ்டா (Bovista) – மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் வயிற்றுப்போக்கு.

18. டிரில்லியம் (Trillium) – இரண்டு வாரத்தில் மாதவிடாய் வருதல்; சிவந்த நிறப்போக்கு; கடுமையான முதுகுவலி; இடுப்பு வலியுடன் போக்கு ஒரு வாரமோ அல்லது அதிகமாகவோ நீடித்தல்; மாதவிடாய் நாள்களுக்கிடையில் வெள்ளைப்பாடு.

19. கல்கேரியா கார்ப் (Calcarea Carb) – மூன்று வாரத்தில் மாதவிடாய் ஏற்படுதல்; அதிகளவு. அதிக நாள் நீடித்தல்; குளிர்ந்த நீர்பட்டால் தடைபடுதல்.

20. கோலோசிந்திஸ் (Colocynthis) – மாதவிடாயின் போது அடிவயிற்று வலி.

21. வைபூர்ணம் ஓபுலஸ் (Viburnum Opulus) – மாதவிடாயின் போது வலி முதுகில் ஆரம்பித்து கர்ப்பப்பையில் முடிதல் .

22. பிளம்பம் மெட் (Plumbum Met) – வளர்ச்சியடையாத கர்ப்பப்பை.

23. தூஜா (Thuja) ஓலியம் ஜெகோரிஸ் (Oleum Jecoris) – மேலுதடு, முகவாய் கட்டை, கை, கால்களில் தேவையற்ற முடி வளர்ச்சி.

24. பல்சடில்லா (Pulsatilla) – திருமணம், உடலுறவு, ஆண்கள் மீது வெறுப்பு.

25. கல்கேரியா பாஸ் (Calcarea phos) – பெண் பெண்ணையே விரும்பிக் காதலித்தல்.

Dr.S..வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.

செல் – 94431 45700  / Mail : alltmed@gmail.com

<!–

–>