பெண் குழந்தைக்குத் தந்தையானார் தெ.ஆ. வீரர் டி காக்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்குக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சமீபத்தில் திடீரென அறிவித்தார் டி காக். 29 வயதில் இந்த முடிவை அவர் எடுத்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. எனினும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். 29 வயது டி காக் தெ.ஆ. அணிக்காக 54 டெஸ்டுகள், 124 ஒருநாள், 61 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் டி காக். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டமிராமில் வெளியிட்டு, கியாரா டி காக் எனப் பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Quinton De Kock (@qdk_12)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>