'பேட்ட' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட சன் டிவி – இன்னொரு டீ சாப்பிடலாமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்து நல்ல வெற்றியை பதிவு செய்தது. இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆனதையடுத்து ட்விட்டரில் ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் பேட்ட படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை சன் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் வில்லனாக நடித்துள்ள நவாசுதின் சித்திகியை பழிவாங்குவது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜுடன் ரஜினிகாந்த் திட்டமிடுவதாக அந்தக் காட்சி அமைந்துள்ளது. படத்தின் நீளம் கருதி இந்தக் காட்சி குறைக்கப்பட்டிருக்கலாம். 

இதையும் படிக்க | ”நல்லபடியா செஞ்சு குடுங்க” – நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை

இந்த விடியோ நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படமும் விஸ்வாசம் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. ரஜினி ரசிகர்கள் பேட்ட திரைப்படத்தை கொண்டாடுவது போல், அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>