பொங்கலுக்கு தெலுங்கில் மட்டும் வெளியாகும் கார்த்தி படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவரது படங்களும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சங்கராந்திக்கு கார்த்தியின் படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. கார்த்தியின் படமான ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் தெலுங்கில் ‘நா பேரு சிவா’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

இதையும் படிக்க | பிக் பாஸிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறுகிறாரா அமீர்?

பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்தை தெலுங்கில் ‘நா பேரு சிவா 2’ என்ற பெயரில் வெளியிடவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சங்கராந்திக்கு கரோனா பரவல் காரணமாக எந்தப் பெரிய படங்களும் வெளியாகாததால் நா பேரு சிவா 2 நல்ல வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>