பொன்னியின் செல்வனுக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தின் கதாநாயகன் இவரா?

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, காரத்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷிமி, பிரபு, ஜெயராம், ரகுமான், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | காதலருடன் திருமணம் : புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகை ரெபா

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் தான் சித் ஸ்ரீராம் பாடலாக அறிமுகமாகியிருந்தார். மேலும் மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தின் மூலம் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>