போலந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை சிலந்திகள் பறிமுதல்

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலைச் சேர்ந்த சிலந்தி வகையின் 10 சிலந்திகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போலந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றின் மீது சந்தேகமடைந்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். 

இதையும் படிக்க | ஆந்திரத்தில் புதிதாக 1,367 பேருக்கு கரோனா தொற்று

அப்போது அந்த பார்சலில் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலந்தி வகையைச் சேர்ந்த 10 சிலந்திகள் இருந்தது தெரியவந்தது. 

இந்நிலையில் அந்தப் பார்சலை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலில் இடம்பெற்றுள்ள முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>